SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உசிலம்பட்டியில் பொது இடங்களில் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம்

12/11/2017 10:21:29 AM

உசிலம்பட்டி, டிச. 11:  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் பகுதி, நகை கடை பஜார், ஜவுளி கடை பஜார், பேரையூர் சாலை, நந்தவன தெரு உட்பட 8 பொது இடங்களில் டூவீலர், 4 சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது. மீறி நிறுத்தினால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணம் வசூலிக்க நகராட்சி முடிவு செய்து, ஒப்பந்தபுள்ளி கோரியுள்ளது.  இதற்கு உசிலம்பட்டி வட்டார வர்த்தகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வர்த்தக சங்க தலைவர் ஜவஹர் கூறுகையில், ‘உசிலம்பட்டி நகராட்சியில் சிறிய கிராமங்கள் உள்ளன.

இங்குள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் விளை பொருட்களை டூவீலர்களில் உசிலம்பட்டிக்கு கொண்டு வருகின்றனர். பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது விவசாயிகள், பொதுமக்கள், வர்த்தகர்களை பாதிக்கும். எனவே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாகன காப்பகம் அமைத்து அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். பொது இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதை கைவிடக் கோரி நகராட்சி ஆணையர் சுப்பையாவிடம் முறையிட்டுள்ளோம். அவரும் இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்