SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபத்தை ஏற்படுத்தும் நான்கு வழிச்சாலை தடுப்பு கம்பி இல்லாததால் விபத்து அபாயம்

12/7/2017 11:21:09 AM

திருப்பரங்குன்றம், டிச. 7:  தனக்கன்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் உடைந்த தடுப்பு கம்பியை சரி செய்யாததால் வாகனங்கள் 30 அடி பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளத்தில் இருந்து ஆஸ்டின்பட்டி செல்லும் வழியில் பெங்களூர்-கன்னியாகுமாரி தேசிய நான்கு வழி சாலை செல்கிறது. மதுரையில்  இருந்து ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனைக்கு செல்பவர்கள் இந்த நான்கு வழிச் சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த சந்திப்பில் சிக்னல் ஏதும் இல்லாததால் சாலையை கடக்கும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது வழக்கமாக உள்ளது.

இந்த இடத்தில் கன்னியாகுமரி செல்லும் சாலையின் இடதுபுறம் உள்ள தடுப்பு கம்பி சில தினங்களுக்கு முன் வாகனம் மோதியதில் உடைந்துவிட்டது. உடைந்த கம்பியை நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்யாமல் இருப்பதால் மீண்டும் இந்த இடத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் வாகனங்கள் 30 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறைக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும் உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2017

    16-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PanwarilalPurohitcuddalur

    கடலூரில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: திமுக கருப்புக்கொடி போராட்டம்

  • Parliamentwintersession

    வெங்கய்யா நாயுடு தலைமையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

  • ManilaworstShrine

    மணிலாவின் மோசமான சேரியில் வாழும் குழந்தைகளின் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள்

  • transportworkersstrike

    போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: பயணிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்