SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் அம்பேத்கர் நினைவு தினம்

12/7/2017 11:21:02 AM

மதுரை, டிச. 7: சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மதுரை அவுட்போஸ்ட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தைகட்சியின் மாவட்டத்தலைவர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது சிலரை மட்டுமே போலீசார் மாலை அணிவிக்க அனுமதித்தனர். எல்லோரையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது துணை கமிஷனர் சசிமோகன் தலைமையில் வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நீண்ட நேரத்திற்கு பின்னர் அவர்களை மாலை அணிவிக்க அனுமதித்தனர். அதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சட்ட கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு அம்பேத்கர் உருவ படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2017

    16-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PanwarilalPurohitcuddalur

    கடலூரில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: திமுக கருப்புக்கொடி போராட்டம்

  • Parliamentwintersession

    வெங்கய்யா நாயுடு தலைமையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

  • ManilaworstShrine

    மணிலாவின் மோசமான சேரியில் வாழும் குழந்தைகளின் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள்

  • transportworkersstrike

    போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: பயணிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்