SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிப்ப ஐகோர்ட்-தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் சமூக ஆர்வலர் கோரிக்கை

12/7/2017 11:20:54 AM

மதுரை, டிச. 7: தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்களின் தொடர் போராட்டத்தால், நோயாளிகளின் பாதிப்பு குறித்து உயர் நீதிமன்றமும், தேசிய மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று சுகாதார உரிமை சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சுகாதாரத்துறையில் போதிய அனுபவமும், திறமையும் இல்லாத தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயின்ற, 465 மருத்துவர்களை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எம்பிபிஎஸ் முடித்து ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை போன்றவற்றில் பணிபுரிந்து, இதற்கிடையே முதுநிலை மருத்துவத்தையும் படித்த மருத்துவர்களைத்தான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நியமனம் செய்ய வேண்டும். ஆனால், 65 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு சட்ட விதிகளை முற்றிலும் பின்பற்றாமல், அனுபவம் இல்லாதவர்களை நேரடியாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவர்களாக நியமித்துள்ளனர். தான் தோன்றித்தனமாக மருத்துவ பணிகள் தேர்வாணையம் இந்த நேரடி நியமனத்தை செய்துள்ளது.

மேலும் இந்த நியமனத்தில் ரூ.200 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும் புகார்கள் கூறப்படுகிறது. இந்த அனுபவம், திறமை இல்லாத முதுநிலை மருத்துவர்கள் பணிக்கு வந்ததால், சுகாதாரம் கேள்விக்குறி ஆகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் தங்களுக்கே தெரியாமல் பெரும் பாதிப்பிற்குள்ளாகவும், தவறான சிகிச்சையாலோ, உரிய சிகிச்சை கிடைக்காமலோ ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நேரடி நியமனத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் 1500 தகுதி படைத்த முதுநிலை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு மருத்துவ மனைகளில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயாளிகள் பாதிப்பு குறித்தும், இந்த நேரடி நியமனம் குறித்தும் உயர்நீதி மன்றமும், தேசிய மனித உரிமை ஆணையமும் தாமான முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்