SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

50 ஆயிரம் மரக்கன்று நடும் பணி தொடக்கம்

12/7/2017 10:24:11 AM

சேலம், டிச.7: தமிழகத்தில் சாலை விரிவாக்கம், புதிய கட்டட கட்டுமானம் உள்ளிட்ட அரசு பணிகளுக்காக மரங்களை வெட்டும் பட்சத்தில், ஒரு மரத்திற்கு 10 மரக்கன்றுகளை நட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சேலம் வன மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான மல்லியகரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு (எஸ்எச்-79), மோகனூர்-நாமக்கல்-சேந்தமங்கலம்-ராசிபுரம் (எஸ்எச்-95), ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி (எஸ்எச்-86) ஆகிய சாலைகளின் விரிவாக்கத்திற்காக 5,062 மரங்கள் வெட்டப்பட்டதற்கு, புதிதாக 50,620 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.

சேலம் மண்டல வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், மரக்கன்றுகளை நடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  அரசு பொறியியல் கல்லூரி, பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் ரோகிணி, எம்பி பன்னீர்செல்வம், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், மண்டல தலைமை வன பாதுகாவலர் உலகநாதன், மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர், ஆத்தூர் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, இடைபடு காடுகள் கோட்ட வன அலுவலர் ராஜாங்கம், மண்வள பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • honduras_11

    ஹோண்டுராஸ் நாட்டில் தனியார் ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

  • kumar_political11

    கர்நாடகாவின், 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்பு : அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்பு

  • 24-05-2018

    24-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்