SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடைப்பாடி பகுதியில் மணல் கடத்திய 3 டிராக்டர் பறிமுதல்

12/7/2017 10:23:58 AM

இடைப்பாடி, டிச.7:   இடைப்பாடி பகுதியில் சரபங்கா ஆற்று படுகை மற்றும் பெரிய ஏரி பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறை
அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஆர்டிஓ ராமதுரைமுருகன், தாசில்தார் கேசவன், ஆர்ஐ பிரபு உள்ளிட்டோர் நேற்று அதிகாலை நேரத்தில் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். அப்போது, மணல் ஏற்றி வந்த 2 டிராக்டரை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால், அதனை ஓட்டி வந்த டிரைவர்கள் டிராக்டர்களை அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.

சோதனையில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், தேவூரில் உள்ள சரபங்கா ஆற்று படுகையில் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின்பேரில், எஸ்.ஐ., பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அண்ணாமார் கோயில் பகுதியில் மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உரிமையாளர் புள்ளாகவுண்டம்பட்டி சக்திவேல் மற்றும் டிரைவர் பெருமாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், 3 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டு, தலா ₹26500 அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

  • vintage_transportmuseum11

    விண்டேஜ் ஸ்கூட்டர்கள், கார்கள்,பல்லக்குகள், விமானங்கள் : இந்தியாவின் போக்குவரத்து அருங்காட்சியகம்

  • vietnam_stormpuyal11

    வியட்நாமில் வெப்ப மண்டல புயல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு ; 20 பேர் மாயம்

  • worldSnailpotti

    இங்கிலாந்தில் நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி : பொதுமக்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்