SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, மக்காசோளம் வயல்களில் வேளாண்துறை விஞ்ஞானிகள் ஆய்வு பரிந்துரைக்கப்பட்ட அளவில் உரமிட ஆலோசனை

12/7/2017 10:15:55 AM

திருச்சி, டிச.7: புள்ளம்பாடி வட்டாரத்தில் பயிர்கள் பாதிப்படைந்ததாக வந்த தகவலின் பேரில் வேளாண்துறை அதிகாரிகள், விஞ்ஞானிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி வட்டாரத்தில் மக்காச்சோளம் 8,419 எக்டரிலும் மற்றும் பருத்தி 6,213 எக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரத்தில் பெய்த மழையால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் வேளாண்துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து திருச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெரியகருப்பன், வட்டார வேளாண் உதவி இயக்குநர் மரியரவி ஜெயக்குமார் ஆகியோர் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானிகள் சுருளிராஜன், நூர்ஜஹான் ஆகியோருடன் புள்ளம்பாடி வட்டாரம் தாப்பாள், வரகுப்பை, சிறுகளப்பூர், பெருவளப்பூர், கருடமங்கலம், சரடமங்கலம், மால்வாய், மா.கண்ணனூர், மேலரசூர், கீழரசூர் மற்றும் அனைத்து கிராமங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடந்த ஆகஸ்டு மாதம் விதைப்பு செய்யப்பட்ட 360 எக்டர் பருத்தி பயிரில் மட்டும் சுமார் 20 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், மேலும் மக்காச்சோளப் பயிரில் அதிகம் தழைசத்து உபயோகித்து உள்ள விவசாயிகளின் வயல்களில் மட்டும் பயிர்கள் சாய்ந்து உள்ளது தெரிய வந்தது.

இந்த ஆய்வு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூறுகையில், பருத்தி பயிரை பொறுத்த வரையில், நுண்சத்து குறைபாடு ஏற்பட்டதால் இலைகளில் பழுப்புநிற புள்ளிகளுடன் இளம் சிவப்பு கலரில் இலைகள் மாறி பின் உதிர்ந்து விடுகிறது. இதனை சரி செய்ய ஒரு டேங்கிற்கு மெக்னீசியம் சல்பேட் 20 கிராம், 10 கிராம் யூரியாவை தண்ணீரில் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். இனிவரும் காலங்களில் பருத்தி விதையிடும் போது ஏக்கருக்கு 5 டன் தொழு உரத் துடன் அடி உரமாக 5 கிலோ மெக்னீசியம் சல்பேட் மற்றும் பருத்தி நுண்சத்து இடுவதன் மூலம் இதுபோன்ற நிலை வராமல் பாதுகாக்க முடியும்.

மக்காச்சோளத்தை பொறுத்தவரை அதிக அளவில் தழைசத்து பயன்படுத்திய வயல்களில் மட்டும் பயிர் சாய்ந்து உள்ளதால் வரும் காலங்களில் மக்காச்சோளம் பயிரில் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக தழைச்சத்து இடுவதை தவிர்த்து பரிந்துரைக்கப்பட்ட அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடுவதன் மூலம் பயிர் சாய்வதை தவிர் க்கலாம். மேலும் சாய்ந்துள்ள மக்காச்சோளம் பயிரில் 15 நாட்களுக்கு பின் கதிர்களை மட்டும் அறுவடை செய்து நன்கு காய வைத்து இழப்பினை குறைக்கலாம் என்றனர். வட்டார வேளாண் அலுவலர் வீரமணி, துணை வேளாண்மை அலுவலர் ஜெகநாதன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நடராஜன், சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-02-2018

  26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-02-2018

  25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • jeyalalithabdystatue

  ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

 • SouthAfricaCapitalWater

  உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

 • somalia_bomb_blast

  சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X