SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

விதிளைமீறி பாதுகாப்பற்ற முறையில் ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

12/7/2017 10:15:40 AM

திருச்சி, டிச.7:  திருச்சி மாவட்டத்தில் விதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவ ட்டத்தில் 164 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் சுமார் 20 லட்சம் மதிப்பு சரக்குகள் உள்ளன. தினசரி ரூ.1.5 லட்சம்வரை விற்பனை நடைபெறுகிறது. ஒவ்வொரு கடைகளிலும் சரக்கு விற்ற பணத்தை இரவு கடைகளில் வைத்துவிட்டு, மறுநாள் வங்கியில் செலுத்த வேண்டும்.

இதனால் டாஸ்மாக் கடைகளில் திருட்டு நடக்காமல் இருக்கவும், தீ விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் சிமெண்ட் கூரை இருக்கும் கடைகளுக்கும் மட்டுமே டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்பது அரசு விதிமுறையாக உள்ளது. ஆனால், திருச்சி மாநகரில் பால்பண்ணை பகுதியில் உள்ள கடைஎண்.10206, கோர்ட் பகுதி - 10226, சீனிவாசநகர் - 10255, திருவானைக்காவல்-10223, 10215 மற்றும் முசிறி, துறையூர், மணப்பாறை ஆகிய பகுதியில் மொத்தம் 13 கடைகள் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போடப்பட்ட கடைகளாக இயங்கி வருகிறது.

இந்த கடைகளின் மேற்கூரைகள் சிமெண்ட் மேற்கூரைகள் போடப்பட்டுள்ளது என அதிகாரிகள் பொய்யாக அறிக்கை சமர்பித்துள்ளனர். இதனால் தினசரி விற்பனை பணத்தை கடைகளில் இரவில் வைத்து செல்லும்போது டாஸ்மாக் ஊழியர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். டாஸ்மாக் பார் அமைக்க விரும்புவர்கள், அதிகாரிகளை உரிய முறையில் கவனித்தால் போதும் ஆஸ்பெடாஸ் சீட் கடைகளுக்கு எளிதில் அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே மாவட்ட கலெக்டர் இந்த பிரச்னையில் தலையிட்டு, நேரிடையாக ஆய்வு செய்து, திருட்டு, தீ விபத்து சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கவும், பணியாளர்கள் அச்சத்தை போக்கவும் அரசின் விதிமுறைகளை மீறி பாதுகாப்பற்ற கட்டிடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மீதும், பொய்யான அறிக்கை சமர்ப்பித்துள்ள அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பணியார்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்