SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக ஊர்வலத்துக்கு ஆட்களை ஏற்றிச்செல்ல மாநகர பஸ்களை அனுப்பிய அதிகாரிகள்

12/6/2017 10:56:37 AM

சென்னை, டிச. 6: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி) சார்பில் சென்னையில் சுமார் 2,700 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம், நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.3 கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. சமீபகாலமாக, எம்டிசி நிர்வாகத்தில் ஆளுங்கட்சி தலையீடு அதிகரிப்பு, அதிகாரிகளின் தவறான செயல்பாடு உள்ளிட்டவற்றால் முறைகேடு சம்பவம் அதிகரித்துள்ளது.
பஸ் பாஸ் வழங்குவதில் முறைகேடு, டிக்கெட் கட்டண வசூலில் கிடைத்த சில்லறையை மாற்றுவதில் முறைகேடு என தொடர் சம்பவங்கள் நடக்கிறது.

இதனால், எம்டிசி நிர்வாகத்துக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா நினைவு நாளையொட்டி நேற்று நடந்த மவுன ஊர்வலத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல ஒவ்வொரு டெப்போக்களில் இருந்தும் 5 மாநகர பஸ்களை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி, மாதாவரம், பூந்தமல்லி, திருவொற்றியூர் ஆகிய பல டெப்போக்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பஸ்களில் அதிமுக நிர்வாகிகள் ஆட்களை அழைத்து சென்றுள்ளனர். இதற்காக காலை 8 மணிக்கே பஸ்கள் கொண்டு செல்லப்பட்டன.

ஊர்வலம் முடிந்து பகல் 12 மணிக்கு பிறகு தான் பஸ்கள் டெப்போக்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. பஸ்களை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்காமல் கட்சி விஷயங்களுக்கு பயன்படுத்தியதால் நேற்று எம்டிசி நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, போக்குவரத்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், இதுபோன்ற தவறான வழியில் பஸ்களை இயக்கினால் நிர்வாகத்தை எப்படி வழி நடத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

கடும் நெரிசல்

மவுன ஊர்வலத்தை முன்னிட்டு பல மாவட்டங்களில் பல்வேறு வாகனங்களில் அதிமுக தொண்டர்கள் காலை 6 மணி முதலே சென்னை நோக்கி அழைத்து வரப்பட்டிருந்தனர். ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக கடற்கரையின் உட்புற சாலையில் திரும்பிய பக்கம் எல்லாம் பஸ் மற்றும் வேன், கார்களாக காட்சி அளித்தது. மேலும் ஜெயலலிதா சமாதிக்கு காலை 10 மணிக்கு ஊர்வலமாக வருவதாக அறிவிக்கப்பட்டதால் காலை 9 மணி முதலே கடற்கரை சாலையில் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது.  

பீக்அவர்சில், அண்ணாசாலை, மெரினா காமராஜர் சாலை, வாலாஜா சாலை உள்பட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டது. கடற்கரை சாலையில் தான், எழிலகம், தலைமை செயலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. அங்கு செல்வோர் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். காமராஜர் சாலை மூடப்பட்டிருந்ததால் மக்கள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். பாரிமுனையில் இருந்து சென்னை நகருக்குள் செல்ல முடியாமல் அலுவலகம் செல்வோர் அவதிப்பட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2018

  20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thashwanth_thookku11

  தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

 • kolkata_del_indhia

  அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

 • haidiZ_market11

  ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

 • stella_unavu

  ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற பாதுகாப்பான உணவு திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X