SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடற்கரை வழியாக வேளச்சேரி செல்லும் ரயில் சேவையில் மாற்றம் நாளை முதல் 10ம் தேதி வரை அமல்

12/6/2017 10:56:26 AM

சென்னை, டிச.6: வண்ணாரப்பேட்டை யார்டில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கடற்கரை ரயில்நிலையம் வழியாக வேளச்சேரி செல்லும் மின்சார சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை வண்ணாரப்பேட்டை - பேசின் பாலம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்கண்ட மின்சார ரயில்கள் நாளை முதல் வரும் 10ம் தேதி வரை மாற்றி விடப்படுகின்றன. அதன்படி, திருவள்ளூரில் இருந்து காலை 11.05 புறப்பட்டு வேளச்சேரி வரை செல்லும் மின்சார ரயில் வண்ணாரப்பேட்டை வழியாக செல்லாமல், சென்ட்ரல் வழியாக கடற்கரை ரயில் நிலையத்தை அடையும். அதேபோல், ஆவடியில் இருந்து பகல் 12.10க்கு புறப்பட்டு வேளச்சேரி வரை செல்லும் மின்சார ரயில் சென்ட்ரல் வழியாக கடற்கரை ரயில் நிலையம் செல்லும்.

கடம்பத்தூரில் பகல் 12.05க்கு புறப்பட்டு வேளச்சேரி வரை செல்லும் மின்சார ரயில் சென்ட்ரல் வழியாக கடற்கரை ரயில் நிலையம் செல்லும். அதேபோல், திருவள்ளூரில் இருந்து பகல் 1.40க்கு புறப்பட்டு வேளச்சேரி வரை செல்லும் மின்சார ரயில் ஆவடி வரை மட்டும் இயக்கப்படும். வேளச்ேசரியில் இருந்து சென்னை கடற்கரை வழியாக ஆவடி, திருத்தணி, அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்கள் நாளை முதல் 10ம் தேதி வரை வேளச்சேரிக்கு பதிலாக சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டைக்கு நாளை முதல் 10ம் தேதி வரை பகல் 2.45 மணிக்கு சிறப்பு பயணிகள் மின்சார ரயில் இயக்கப்படும். அதேபோல், ஆவடியில் இருந்து பட்டாபிராம் வரை பகல் 2.20க்கு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

  • 21-08-2018

    21-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்