SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏடிஎம் மெஷினை உடைத்து துணிகர கொள்ளை முயற்சி

12/6/2017 10:56:17 AM

சென்னை, டிச.6: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், ஜெயலட்சுமி நகர் 1வது தெருவில் தனியார் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் சிசிடிவி கேமரா மட்டும் பொருத்தப்பட்டு உள்ளது. காவலாளி கிடையாது. இந்நிலையில், நேற்று காலை, வங்கி ஏடிஎம் மையத்தை சூபர்வைசர் அன்பு மாரியப்பன் பார்வையிட வந்தார். அப்போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர்  வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடம் விரைந்து வந்த அதிகாரிகள், ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்தனர்.

அதில், மர்ம ஆசாமிகள் ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், முடியாததால் அதில் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது. இதையடுத்து, இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், கொள்ளையர்களின் உருவங்களையும் கைப்பற்றினர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்கு பதிவு செய்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaicmpalanysamy

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

  • LemonFestivalMenton

    பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

  • FloridaguncultureStudents

    புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • KenyaElephants

    யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

  • WorldPressPhoto2018

    உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X