SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்ற மாணவர்களை மீட்க ‘ஆபரேஷன் ஜீரோ கிரைம்’

12/6/2017 10:48:04 AM

கோவை, டிச.6: கோவையில் குற்றமில்லாத மாணவர்களை உருவாக்க ஆபரேஷன் ஜீரோ கிரைம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மாணவர்களின் குற்றங்களை கண்டறிந்து அவர்களை மீட்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நகரில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கல்வி கற்கின்றனர். மாணவர்கள் பலர் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் என பல்வேறு சமூக வலைதலங்களை பயன்படுத்தி வருகின்றனர். சில மாணவர்கள் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா, போதை ஊசிகளை பயன்படுத்துவது, ஆன்ைலன் சூதாட்டம், லாட்டரி போன்றவற்றில் ஒருசில மாணவர்கள் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சில மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் குற்றம் குறையவில்லை. இரு சக்கர வாகன திருட்டு, நகை பறிப்பில் மாணவர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகரில், பல ஆயிரம் மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

குறிப்பாக தென் மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் சொகுசாக வாழ குற்றங்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. மாணவர்களை குற்ற செயல்களில் ஈடுபடுத்த சிலர் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக போலீஸ் வழக்கில் சிக்கிய கஞ்சா, போதை பொருட்கள் கடத்தி விற்கும் நபர்கள் மாணவர்களை பங்குதாரர்களாக சேர்ப்பதும் தெரியவந்துள்ளது. மாணவர்களை தேடி சென்று விற்க மாணவர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற புகாரில் சிக்கும் மாணவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்கி அவர்களை திருத்த போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

குற்ற நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடுகிறார்களா என கண்காணிக்க கல்லூரி நிர்வாகத்தினருக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாணவர்கள் தங்கியுள்ள விடுதி வளாகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிப்பதின் மூலமாக குற்ற செயல்களை தடுக்க முடியும். மாணவர்கள் வாழ்க்கை தடம் மாறாமல் இருக்கும் என போலீசார் கருதுகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2017

    16-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PanwarilalPurohitcuddalur

    கடலூரில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: திமுக கருப்புக்கொடி போராட்டம்

  • Parliamentwintersession

    வெங்கய்யா நாயுடு தலைமையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

  • ManilaworstShrine

    மணிலாவின் மோசமான சேரியில் வாழும் குழந்தைகளின் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள்

  • transportworkersstrike

    போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: பயணிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்