SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோட்டில் சுற்றிய பெண் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

12/6/2017 10:47:55 AM

கோவை, நவ.6: கோைவ மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வெரைட்டிஹால் ரோட்டில் கடந்த 19ம் தேதி சுமார் 30 வயதுடைய பெண் ஒருவர் ஆதரவின்றி சாலையில் சுற்றிக் கொண்டிருந்தார். வெரைட்டிஹால் ரோடு போலீசார்  அந்த பெண்ணை மீட்டு ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த காப்பகத்தை பராமரித்து வரம் ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் நிர்வாகிகள், அந்த பெண்ணை காரமடையிலுள்ள கருணை இல்லத்தில் தங்க வைத்து கவுன்சலிங் அளித்தனர். அதன் முடிவில் இருதினங்களுக்கு முன்னர் அந்த பெண் சகஜ நிலைக்கு திரும்பி ஒரு தொலைபேசி எண்ணை அளித்தார். காப்பக நிர்வாகிகள் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினர்.

அதில் சாலையில் சுற்றி மீட்கப்பட்ட பெண் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவரது மனைவி சசிகலா(30) என்பதும், கடந்த 18ம் தேதி வீட்டை விட்டு மாயமாகிவிட்டதும் தெரியவந்தது. மேலும், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண் ரயில் மூலம் கோவை வந்த அந்த பெண் எங்கே செல்வது எனத்தெரியாமல் சுற்றி வந்துள்ளார் என்பதும், இந்த பெண்ணுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் மீட்கப்பட்ட தகவல் குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவர் ஜானகிராமன் மற்றும் குடும்பத்தினர் நேற்று கோவை வந்து சசிகலாவை அழைத்து சென்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Gujarat2

    குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்