SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதுநிலை மருத்துவ மாணவர்கள் தூக்கில் தொங்கும் போராட்டம்

12/6/2017 10:47:45 AM

கோவை,டிச.6 : கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று தூக்கில் தொங்கும் போராட்டம் நடந்தது. தமிழக அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவர்களை நேரடியாக நியமனம் செய்ததை கண்டித்து கோவையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கடந்த 29ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக நடந்த கலந்தாய்வின் மூலம் பணி நியமனம் செய்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அவர்களை தற்காலிக மருத்துவர்கள் என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும்.

தனியார் மருத்துவமனையில் படித்தாலும் 2 வருடங்கள் கிராமப்புற சேவையை செய்தவர்களை மட்டுமே கலந்தாய்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும். கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று அவர்கள் கருப்பு சட்டை அணிந்து தூக்கில் தொங்குவது போல நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பாக பேட்டி அளித்துள்ளார் எனவும், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2017

    16-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PanwarilalPurohitcuddalur

    கடலூரில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: திமுக கருப்புக்கொடி போராட்டம்

  • Parliamentwintersession

    வெங்கய்யா நாயுடு தலைமையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

  • ManilaworstShrine

    மணிலாவின் மோசமான சேரியில் வாழும் குழந்தைகளின் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள்

  • transportworkersstrike

    போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: பயணிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்