SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏரியில் 2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்

11/17/2017 10:29:02 AM

தாம்பரம் அடுத்துள்ள சிட்லப்பாக்கம் பெரிய ஏரியை ஆக்கிரமித்து ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், அவற்றை இடித்து அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 25 கட்டிடங்கள் மற்றும் கோயில் மண்டபத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்தனர்.

இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஏரிக்கரையில் இருந்த மற்றொரு ஆக்கிரமிப்பு மண்டபத்தையும் இடித்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெறும் எனவும், ஏரியின் கரையில் உள்ள மூன்று கோயில்களுக்கும் ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் சிலைகள் அகற்றப்பட்டதும் அந்த கோயில்களும் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்