SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகராட்சி கணக்கில் பணம் இல்லை வங்கியில் செலுத்தப்பட்ட காசோலைகள் திரும்பியது

11/17/2017 10:28:52 AM

சென்னை, நவ.17: மாநகராட்சி வங்கி கணக்கில் பணம் இல்லாததால் சம்பளத்தை பெற வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை திருப்பியதால் துப்புரவு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சாலை அமைப்பது, பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி நெருக்கடி காரணமாக பணிகள் முடிக்கப்பட்ட பிறகும் ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை வழங்காமல் ரூ.700 கோடிக்கு மேல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியாமல் பெருநகர சென்னை மாநகராட்சி தத்தளித்து வருகிறது. இந்த சூழலில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது மண்டலம் 189வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்கரணையில் துப்புரவு தொழிலாளியாக 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம்தோறும் 5ம் தேதி ₹10,380 சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு மாதமும் காலதாமதமாக வழங்குவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த மாதமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தொழிலாளர்களுக்கு சம்பள தொகை செக் வழங்கப்பட்டது. ஆனால், வங்கிகளுக்கு டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் இல்லை என்று காசோலை திரும்பியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், மாநகராட்சி வங்கி கணக்கில் பணம் இல்லாததால் இன்று வரை சம்பளம் வழங்கவில்லை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தொழிலாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இது குறித்து, செங்கொடி சங்கத்தின் துணை பொது செயலாளர் தேவராஜ் கூறியதாவது: சம்பளம் பெறுவதற்காக வங்கிகளில் காசோலை போட்ட 10 தொழிலாளர்களுக்கு பவுன்ஸ் ஆகிவிட்டது. அதிகாரிகள் அளித்த காசோலையை வங்கிக்கு கொண்டு சென்று கேட்டால் பணம் இல்லை என்று வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பலர் காசோலையை வங்கிகளில் போடாமல் கையிலேயே வைத்துள்ளனர்.

சம்பளம் வராததால் பல தொழிலாளர்கள் வட்டிக்கு பணம் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களை அதிகாரிகள் வெயில், மழை என்று பாராமல் வேலை வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் சம்பளம் வழங்குவதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் மட்டும் எதுவும் நடவடிக்கை எடுக்காமல் தங்களது சம்பந்தம் இல்லாததை போல் அமைதியாக இருந்து விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்