SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டப்பகலில் வீடுகளில் புகுந்து பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த கொடூரன்

11/17/2017 10:28:41 AM

சென்னை, நவ.17: சென்னை அடையாறு, கிண்டி, ஆலந்தூர், சைதாப்ேபட்டை, ஈக்காட்டுதாங்கல், கோட்டூர்புரம் போன்ற பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் முகவரி மற்றும் தண்ணீர் கேட்பது போல் கத்திமுனையில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதுகுறித்து, காவல் நிலையங்களில் புகார்கள் வந்தாலும் கொள்ளையனை எளிதில் கைது செய்ய முடியவில்லை. இதற்கிடையே, கொள்ளை சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டோர் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்து அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்தனர். அதைதொடர்ந்து அடையாறு துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

அதேநேரம் குற்றம் நடந்த பகுதிகளில் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிண்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து ஒப்பிடும் போது தேடப்படும் குற்றவாளி  என தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் வந்து பிடிபட்ட வாலிபரை கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கிருஷ்ணகிரியை சேர்ந்த அறிவழகன் (28) என்றும், கிண்டியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அறிவழகன் பல இடங்களில் சுற்றி தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் குறித்து முதல்நாள் நோட்டமிட்டு உள்ளார். பின்னர், வீட்டில் தனியாக பெண் இருப்பதை உறுதி செய்து கொண்டு அவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, தண்ணீர் கொண்டு வர செல்லும் போது  பின்தொடர்ந்து பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளார்.

அப்போது, அழகான பெண்களாக இருந்தால் அவர்களை கத்தி முனையில் மிரட்டி ஆசை தீர அனுபவித்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியில் தெரிந்தால் உன் குடும்பம்தான் சீரழியும். அதையும் மீறி நீ சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன பல பெண்கள் யாரும் பாலியல் பலாத்காரம் குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அறிவழகன், இதே பாணியில் சென்னையின் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்.

திருட்டு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஒரு மாதமாக கண்காணித்து தற்போது பிடித்துள்ளோம். சென்னையில் மட்டும் 15 முதல் 20 சம்பவங்களில் பெண்களை சீரழித்ததாக தெரியவந்துள்ளது. அறிவழகனுடன் இந்த சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதால் புகார் குறித்து நாங்கள் ரகசியமாக வைத்துள்ளோம். இந்த வழக்கில் அறிவழகனுக்கு உதவி செய்த சிலரை நாங்கள் கைது செய்ய வேண்டி உள்ளதால் தற்போது மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்