SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புக்கு லஞ்சம் இன்ஜினியருக்கு 2 ஆண்டு சிறை

11/17/2017 10:28:17 AM

சென்னை, நவ.17: சூளைமேடு திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், கடந்த 2008ம் ஆண்டு அதே பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெற சூளைமேடு பகுதியில் உள்ள குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் உரிய பணம் செலுத்தி விண்ணப்பித்தார்.  வாரியத்தில் இளநிலை இன்ஜினியராக பணியாற்றி வந்த ரகீம்பாஷா, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு வழங்க  ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுபற்றி, ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, ரசாயணம் தடவிய பணத்தை ரகீம்பாஷாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரகீம்பாஷாவை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, ரகீம்பாஷா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.
 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

  • 21-08-2018

    21-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்