SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவியின் கள்ளக்காதலன் கிடைக்காததால் கழுத்தை இறுக்கி உறவினர் கொலை

11/15/2017 10:55:08 AM

சென்னை, நவ.15: சென்னை கோயம்பேட்டில் மனைவியின் கள்ளக்காதலன் கிடைக்காததால் அவரது உறவினரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி, கொலை செய்த கணவன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி அடுத்த ஆமணக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (27). இவரது தாய் மாமன் வல்லநாடு பகுதியை சேர்ந்த பழனிசாமி (47). இவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வந்தனர். கோயம்பேடு தெற்கு மாட வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து, வசித்து வந்தனர். நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலைய காவல்நிலையத்துக்கு பழனிசாமி சென்று, ‘‘எனது உறவினர் சசிகுமார் இறந்துவிட்டார்’’’’’’’’’ என்று கூறி உள்ளார். உடனே இன்ஸ்பெக்டர் ரூபன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து, சசிகுமாரின் சடலத்தை பார்வையிட்டார்.

அப்போது, அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட காயம் இருந்து உள்ளது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. எனவே சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து, போலீசார் பழனிசாமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழனிசாமிக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனால் பெண்ணின் கணவர் டேவிட் மற்றும் அவரது நண்பர் சிவபெருமான் ஆகியோர் பழனிசாமி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.  

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிசாமியை தீர்த்துக்கட்டுவதற்காக டேவிட் மற்றும் சிவபெருமான் ஆகிய இருவரும் அவரது வீட்டுக்கு சென்று உள்ளனர். அப்போது பழனிசாமி அங்கு இல்லை. உறவினர் சசிக்குமார் மட்டும் அங்கு இருந்து உள்ளார். அப்போது அவர்கள் பழனிசாமி பற்றி தவறாக பேசியதால் சசிக்குமார் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டேவிட் மற்றும் சிவபெருமான் ஆகிய இருவரும் சேர்ந்து, சசிக்குமாரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்