SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெருசலேம் நகருக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக பல லட்சம் ரூபாய் மோசடி

11/15/2017 10:54:56 AM

ஆவடி, நவ.15: ஜெருசலேம் நகருக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபரை போலீசார் கைது செய்தனர்.அம்பத்தூர், கள்ளிக்குப்பம், பசும்பொன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ரமணி (65). இவர், தனது உறவினர் மற்றும் தோழிகளுடன் இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேமுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதற்காக, அவர்கள், குரோம்பேட்டை ராதா நகரில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் சாலமன் ராஜன் (46) என்பவரை சந்தித்துள்ளனர். அவரும், ரமணி குழுவினரை ஜெருசலேமுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து, ரமணி மற்றும் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர், ஜெருசலேமுக்கு 10 நாள் சுற்றுலா செல்வதற்கான தொகை ரூ.12.5 லட்சத்தை கடந்த ஜூன் மாதம், சாலமன் ராஜனிடம் கொடுத்துள்ளனர். ஆனால் 4 மாதங்கள் ஆகியும் ரமணி குழுவினரை ஜெருசலேமுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை சாலமன் ராஜன் செய்யவில்லை. இதனால், விரக்தியடைந்த அவர்கள்,  சுற்றுலா செல்வதற்காக செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு சாலமன் ராஜனை பலமுறை சந்தித்து கேட்டுள்ளனர். ஆனால், அவர் பணத்தை தராமல் நாட்களை கடத்தி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்  அலுவலகத்தை மூடிவிட்டு அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, ரமணி நேற்று முன்தினம் அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கந்தகுமார், எஸ்ஐ அனிருதின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சாலமன் ராஜனை நேற்று கைது செய்தனர். விசாரணையில், சாலமன் ராஜன், ரமணியிடம் பணத்தை ஏமாற்றியது போலவே,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோரை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பல லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதன்பின்னர், அவரை போலீசார் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2017

    18-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afg_suicide_dead

    ஆப்கான் நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

  • GujaratAfricanSiddhi

    குஜராத்தில் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி மக்கள்: பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தஞ்சம்

  • Karthikayam

    இன்று கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

  • sasoondocks_meen

    நகர்ப்புற கலை விழா: மும்பையின் 142 ஆண்டுகள் பழமையான மீன் சந்தையை வண்ணங்கள் நிறைந்த தோற்றத்துடன் உருமாற்றிய கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்