SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாமல்லபுரத்தில் உள்ள கல் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு

11/15/2017 10:54:40 AM


சென்னை, நவ.15: இந்திய புவிசார் குறியீட்டு பதிவகம் மாமல்லபுரம் கல் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. உலக புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் உள்ள கல் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க கோரி தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழகம், சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் மாமல்லபுரத்தில் உள்ள கல் சிற்பங்கள் அனைத்தும் வியக்க தக்கவையாக காட்சியளிக்கிறது. இந்த சிற்பங்கள் 7ம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் நிறுவப்பட்டது. பல்லவ மன்னர் மகேந்திர வர்மா (580-630), அவரது மகன் நரசிம்ம வர்மா (630-668), பரமேஷ்வர வர்மா (672-700), நரசிம்ம வர்மா ராஜசிம்மா (700-728) என 6ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரையிலான இவர்களது காலக்கட்டதில் மாமல்லபுரம் முழுவதும் பல சிறப்புமிக்க சிற்பங்களை உருவாக்கியுள்ளனர்.

இப்போது மாமல்லபுரம் சிற்பங்களின் நகரமாக உள்ளது. கல் சிற்பம் முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் தோன்றியுள்ளது. அங்கு பல வியப்புமிக்க சிற்ப கோயில்கள் உள்ளன. மேலும் அங்கு உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களை காண வெளிநாட்டினர் அதிகமாக வருகின்றனர். சுற்றுலா தலமாகவும் உள்ளது. மேலும் இன்றும் மாமல்லபுரத்தில் சிறப்புமிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரத்தை சுற்றியுள்ள பல ஊர்களிலும் சிலை வடிக்கப்பட்டு வருகிறது.
எனவே, மாமல்லபுரத்தில் உள்ள கல் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க கோரி கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த புவிசார் குறியீடு பதிவகம், மாமல்லபுரம் கல் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி உத்தரவிட்டது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்