SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுடுகாட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு பேரூராட்சி குப்பை வண்டிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

11/14/2017 10:41:36 AM

தாம்பரம், நவ. 14: சுடுகாட்டில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரூராட்சி குப்பை வண்டிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள், பதுவஞ்சேரி 9, 10, 11 ஆகிய வரர்டுகளுக்கு உட்பட்ட சுடுகாட்டில் கொட்டி வருகின்றனர். இதனால், சுடுகாடு மற்றும் இடுகாடு இடங்கள் முழுவதும் குப்பை கழிவுகள் சூழ்ந்து காணப்படுகிறது.

தற்போது, மழைக்காலம் என்பதால் குப்பை கழிவுகளுடன் தண்ணீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகமாகி சுற்றுப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மர்ம காய்ச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இந்த சுடுகாட்டில் உள்ள குப்பையை அகற்றவும், இங்கு குப்பை கொட்டுவதற்கும் இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், நேற்று இந்த சுடுகாட்டிற்கு குப்பைகளை கொட்டுவந்த பேரூராட்சி குப்பை வண்டிகளை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சேலையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த ஒரு மாதம் வரை மட்டும் இங்கு குப்பைகள் கொட்டப்படும். பின்னர் இங்கிருந்து குப்பைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்