SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகை தயாரிக்கும் நிறுவனத்தில் 8 கிலோ தங்கம் கொள்ளை

11/14/2017 10:41:24 AM

சென்னை, நவ. 14: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் உக்கம் ராஜ் (44). சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் பல ஆண்டுகளாக தங்க நகைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நாடு முழுவதும் ஆர்டர்கள் பெற்று நகைகள் செய்து வருகிறார். இங்கு 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

இங்கு, கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன் ஆர்டர் பெற்ற 12 கிலோ தங்கத்தை உக்கம் ராஜ், ஊழியர் ராஜேஷிடம் கொடுத்து நகைகளை செய்ய கூறியுள்ளார். எப்போதும் வார இறுதி நாட்களில் நகைகள் கணக்கெடுப்பது வழக்கம்.

அதன்படி நேற்று நகைகள் கணக்கெடுக்கப்பட்டது. அப்போது ராஜேஷிடம் கொடுக்கப்பட்ட 12 கிலோ தங்கத்தில் 8 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உக்கம் ராஜ் நகைகள் குறித்து ராஜேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு அவ், சரிவர பதிலளிக்கவில்லை. இதையடுத்து, ராஜேஷ் மற்றும் சில ஊழியர்கள் தலைமறைவாகினர். இதனால், ராஜேஷ் மற்றும் அவருடன் வேலை செய்யும் நபர்கள் மீது பட்டறை உரிமையாளர் உக்கம் ராஜ் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ராஜேஷ் விழுப்புரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் விழுப்புரம் விரைந்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்