SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற முயற்சி

11/14/2017 10:41:11 AM

சென்னை, நவ. 14: போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற முயன்ற இலங்கை தமிழர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.போலி ஆவணங்கள் கொடுத்து பலர் பாஸ்போர்ட் பெற முயற்சி செய்வதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து புகார்கள் வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி பாஸ்போர்ட் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது சபீக் அகமது என்பவர் நடவடிக்கையில் சந்தேகம் வந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர்
.
அதில், தஞ்சை மாவட்டம் அதிராமப்பட்டிணம் பகுதியை சேர்ந்த சபீக் அகமது (29) என்பது தெரிந்தது. இவர், சென்னை முத்தமிழ்நகர் பகுதியை சேர்ந்த முகமது சலீம் (60), ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த குமார் (30), சூளைமேடு பெரியார் பாதையை சேர்ந்த பெர்னாட் சேவியர் (67) ஆகியோரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு போலி முகவரியில் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை போலியாக தயாரித்து இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற முயன்றது தெரியவந்தது.

அதேபோல் கன்னியாகுமரி, பெருமாள்புரத்தை  சேர்ந்த இலங்கை தமிழர் சஞ்சீவி (எ) சுதர்சன் (29) என்பவருக்கு போலி முகவரி  மூலம் பாஸ்போர்ட் பெற்று தர முயற்சி எடுத்தது தெரியவந்தது.அதைதொடர்ந்து போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் பெற முயன்ற இலங்கை தமிழர் சஞ்சீவி, சபீக் அகமது, முகமது சலீம், குமார், பெர்னாட் சேவியர் ஆகிய 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்