SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமரர் ஊர்தி டிரைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

11/14/2017 10:34:09 AM

கோவை, நவ.14: தமிழ்நாடு அரசு இலவச அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின்(சிஐடியூ) சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில தலைவர் அன்பழகன், பொதுச்செயலாளர் அன்புராஜா ஆகியோர் முன்னிைல வகித்தனர். இதில், அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.

அனைத்து ஓட்டுனர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒரு வாகனத்தில் 3 சடலங்களை ஏற்றி எதிர் எதிர் திசையில் செல்ல சொல்ல கூடாது. எங்களுக்கு நோய் தொற்று தடுப்பூசி மற்றும் தற்காப்பு பரிசோதனைகளை உறுதி செய்ய வேண்டும். ஓட்டுனர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். அவர்களை சொந்த மாவட்டத்தில் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்