SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துணைவேந்தரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

11/14/2017 10:33:54 AM

கோைவ, நவ. 14: சமூகநீதி கட்சி சார்பில் கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கட்சி நிறுவனர் பன்னீர்செல்வம் தலைமைதாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பேராசிரியர் பணி நியமங்களின் இடஒதுக்கீட்டில் ஊழல் செய்த கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கணபதியை உடனடியாக பதவி நீக்கி, கைது செய்ய வேண்டும், பேராசிரியர் நியமன ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும், எஸ்சி, எஸ்டி மக்களின் இடஒதுக்கீட்டை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கோவை, நவ.14: கோவை புலியகுளத்தில் ஒரு ஓட்டு வீட்டில் நேற்று தீ பிடித்தது. இந்த வீட்டின் அருகேயிருந்த வீட்டிலும் தீ பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த துணி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கோவை, நவ. 14: கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் கிராமம், அப்பநாயக்கன்பட்டியில் 200 க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லாமலும், வீடு வாங்க பொருளாதார வசதி இல்லாமலும் உள்ளனர். வீடு கட்டுவதற்கு வீட்டுமனை வழங்கக்கோரி இருபது ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர். ஆனால், இடம் இல்லை என அரசு அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். அதிகாரிகளின் செயலை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் மக்கள் கட்சி சார்பில் நேற்று அருந்ததியர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அப்பநாயக்கன்பட்டியிலுள்ள அரசு இடங்களான நத்தம், வேலி, இட்டேரி , குட்டை உள்ளிட்ட இடங்களின் காலி இடங்களின் அளவுகளை குறிப்பிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

தாய், மகன் தற்கொலை முயற்சி கோவை, நவ.14: கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். கூலி ெதாழிலாளி. இவரது மனைவி ராதாமணி (35). இவர்களுக்கு 16 வயதில் மகன் உள்ளார். 10ம் வகுப்பு படிக்கிறார். குமாரும், ராதாமணியும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று முன் தினம் ராதாமணியும், அவரது மகனும் விஷம் குடித்தனர். தனது மகனுக்கு விஷம் கொடுத்த பின்னர் ராதாமணி விஷம் குடித்தனர். இருவரும் வீட்டில் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ேகாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-12-2018

  12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்