SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாற்று இடம் வழங்கக்கோரி ஆர்டிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

11/14/2017 10:28:31 AM

ஆத்தூர், நவ.14: மாற்று இடம் வழங்கக்கோரி, வசிஷ்ட நதிக்கரையோர குடியிருப்புவாசிகள் நேற்று ஆத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட வசிஷ்ட நதி கரையோரத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள், நீர்நிலை புறம்போக்கு பகுதியை ஆக்கிரமித்து குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, குடியிருப்புவாசிகள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மாணிக்கம் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த 300க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று திரண்டு வந்து, ஆத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அத்துடன் மாற்று இடம் வழங்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தகவலறிந்த ஆர்டிஓ செல்வன், சின்னதம்பி எம்எல்ஏ, நகர அதிமுக செயலாளர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வசிஷ்டநதி கரையோர குடியிருப்புவாசிகளுக்கு மாற்று இடம் தர நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏவும், ஆர்டிஓவும் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், ஆர்டிஓ அலுவலக பணிகள் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்