SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியமாக வாழ கிரீன் டீ பருகுங்கள்

11/14/2017 10:28:19 AM


“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. இன்றைய கால கட்டத்தில் மனிதனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல்வேறு நோய்களுக்கு உட்படுகிறான். நமது முன்னோர்கள் போல் ஆரோக்கியமாக வாழ, இயற்கை உணவுகள், கிரீன் டீ, முறையான உடற்பயிற்சிகளை கடைபிடிக்க வேண்டும். நமது உடலில் தினமும் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற வேதிவினையின் போது, உற்பத்தியாகிற “ப்ரிரேடிகல்ஸ் கெமிக்கல்”  உடலின் செல்களை சேதப்படுத்தி நோய்கள் வர காரணமாகிறது. ப்ரிரேடிகல்ஸ் என்பது நாம் பிறந்தது முதல் சுவாசிக்கும், ஆக்ஸிஜன் O2 ஆக அப்படியே நமது உடலில் செல்லாமல் O1+O1 ஆக பிரிந்து எந்த செல்லில் சேருகிறதோ, அந்த செல் சேதமாகி நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்: நமது உடலில் நோய்கள் வர காரணமாகிற ப்ரிரேடிகல்ஸ், அதாவது செல்கள் சேதமாவதை தடுக்கிறது. இதில் O2 வை O1, O1 ஆக பிரியவிடாமல், அப்படியே O2 ஆகவே செல்களில் சேர, ஆன்டி ஆக்ஸிடன்ட் செயல்புரிகிறது ஆன்டி ஆக்ஸிடன்ட்டின் வேலையே O2 வை பிரிய விடாமல் தடுப்பது தான். மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட், நமது உடல் செல்களின் பாதுகாவலனாக இருந்து, சிறப்பாக செயல்பட உதவுகிறது. இயற்கையாகவே நமது உடலில் நோய் எதிர்ப்பு செல்கள் மிகவும் அதிகமாக்க உதவுகிறது. இதனால் நோய்கள் வருவது தடுப்படுகிறது:

கிரீன் டீ: தேயிலை செடியின் நுனிக்கொழுந்து இலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருப்பதை விட மிகவும் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது என பல ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.  நமது உடல் ஆரோக்கியமாக இருக்க, கிரீன் டீயை பருகலாம்.வெந்தய கிரீன் டீ: பெரியவர்கள் சிலர் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை ஊற வைத்தோ, பொடியாகவோ அல்லது அப்படியே சாப்பிடுவர். இது ஜீரணமாகி, ரத்தத்தில் கலக்க 5 மணி நேரம் ஆகும். ஆனால் வெந்தய கிரீன் டீயை, வெறும் வயிற்றில் தினமும் காலை குடித்தால், அரை மணி நேரத்தில் ரத்தத்தில் கலந்து உடலின் வெப்பத்தை சமநிலையாக வைக்கும். மேலும் உணவுக்குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளை தூய்மைபடுத்தும்.

கடுக்காய் கிரீன் டீ: இரவு தூங்கும் முன் கடுக்காய் கிரீன் டீயை குடித்தால், நமது மலக்குடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றி, மலவாய், மலக்குடல், ஆசனவாய் ஆகிய பகுதியை தூய்மைப்படுத்தும். நமது உடலில் தினமும் கழிவுகள் சேராமல், அதை முறையாக வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க கடுக்காய் கிரீன் டீ உதவுகிறது.

மாதுளை கிரீன் டீயை குடித்தால், ரத்த செல்கள் அதிகமாகும். வாழைத்தண்டு கிரீன் டீ குடித்தால், சிறுநீரக கற்கள் கரைக்கப்படும். ஜீரண உறுப்புகளை சரிப்படுத்த, முள்ளங்கி கிரீன் டீ குடிக்க வேண்டும். ரத்தத்தை விருத்தி செய்ய, பீட்ரூட் கிரீன் டீ குடிக்க வேண்டும். கண்பார்வையை சரி செய்ய, கேரட் கிரீன் டீ குடிக்க வேண்டும். உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்த, ஒவ்வொரு விதமான கிரீன் டீ உள்ளது. எனவே கிரீன் டீ குடித்து, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள், என்று அதன் தயாரிப்பாளர் செவிலம்பா கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-11-2017

  18-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • afg_suicide_dead

  ஆப்கான் நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

 • GujaratAfricanSiddhi

  குஜராத்தில் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி மக்கள்: பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தஞ்சம்

 • Karthikayam

  இன்று கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

 • sasoondocks_meen

  நகர்ப்புற கலை விழா: மும்பையின் 142 ஆண்டுகள் பழமையான மீன் சந்தையை வண்ணங்கள் நிறைந்த தோற்றத்துடன் உருமாற்றிய கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்