SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

“உங்கள் நலம் உங்கள் கையில்” சர்க்கரை நோய், ரத்தசோகையை கட்டுப்படுத்த எளிய வழிமுறைகள்

11/14/2017 10:27:59 AM

டெங்கு போன்ற பருவகால வியாதிகள் உயிருக்கு ஆபத்தானதாக இருந்தாலும், அவை தற்காலிகமானவை தான். ஆனால் மனிதரை எப்போதும் அச்சுறுத்தும் வியாதிகள், சர்க்கரை நோய், இருதய நோய், ரத்தசோகை மற்றும் அதன் பின் விளைவுகள் தான். மருத்துவரின் அறிவுரைகளை முழுமையாக பின்பற்றி, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து, தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அத்துடன் சர்க்கரை, ரத்தகொதிப்பு ஆகியவற்றை முறையாக தொடர்ந்து கண்காணித்தல் அவசியமாகும்.

இதன்மூலம் நோயின் பின் விளைவுகள் வராமல், பாதுகாத்து கொள்ளலாம். புகைபிடிப்பது, மது அருந்துவது ஆகியவை, நோயின் பாதிப்பை பன்மடங்கு அதிகப்படுத்தும். இப்பழக்கங்களை அறவே ஒழித்தால், உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் நலம் பயக்கும். பெண்கள் மட்டுமின்றி, 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆண்களையும் அதிகமாக தாக்க கூடியது ரத்தசோகை நோய். மருத்துவரின் ஆலோசனைக்கு பின், அனைத்து பச்சை காய்கறிகள், கீரை வகைகள், வைட்டமின் பி, வைட்டமின் டி, கால்சியம் சத்துள்ள கீரை வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொண்டால், ரத்தசோகை நோயிலிருந்து மீண்டு வரலாம். ரத்தசோகை நோய் முற்றிலும் சரி செய்ய கூடியது. ரத்தத்தின் அளவு சீரானால், ஒருவர் 90 சதவீதம் நலமாக இருப்பார். இத்தகவலை சுவஸ்திகா பார்மா உரிமையாளர் சகாதேவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்