SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.120 கோடி மதிப்பீட்டில் ஜெ.அறிவித்த தமிழ்தாய் சிலை திட்டம் அம்போ’ 4 ஆண்டுகளாக நீடித்த கோப்புக்கு முடிவு

11/14/2017 9:06:11 AM

மதுரை, நவ.14: மதுரையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவில் அறிவிக்கப்பட்ட தமிழ்தாய் சிலை நிறுவும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள சுதந்திரதேவி சிலை போன்று மதுரையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 176 அடி உயரத்தில் தண்ணீருக்கு நடுவில் தமிழ்தாய் சிலையும், அதைச் சுற்றிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐ வகை நிலங்கள் உருவாக்கி, அங்கு உல்லாசப் படகில் சென்று திரும்பும் திட்டம் நிறைவேற்றப்படும் என 2013ம் ஆண்டு அப்போதைய  முதல்வராக இருந்தது, மறைந்த ஜெயலலிதா அறிவித்தார். இது அரசின் சாதனைப் பட்டியலிலும் வெளியிடப்பட்டது. இதற்காக முதலில் வண்டியூர், அடுத்து திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்கால் கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டன. பின்னர் இரு கண்மாய்களும் நிராகரிக்கப்பட்டன.

 இதன் பிறகு மாடக்குளம், நிலையூர், துவரிமான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கண்மாய்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது. இதில் ஒவ்வொரு கண்மாயின் வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் இறுதி முடிவும் எடுக்கப்படாமல் கோப்புகள் தூங்கின.  திட்டத்தை அறிவித்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் இந்த கோப்புகளின் மீது எந்த முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. இந்தத் திட்டத்தின் கதி என்ன? என்று அமைச்சர்களோ, அதிகாரிகளோ எந்தப் பதிலும் வெளியிடாமல் மவுனம் சாதித்தனர்.
 மதுரை தல்லாகுளம் கண்மாயில் கட்டப்பட்டுள்ள உலக தமிழ் சங்க கட்டிடம் அருகே கட்டி தண்ணீர் நிரப்ப முடியுமா? என ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அதுவும் சாத்தியமாகாது என கைவிரிக்கப்பட்டது. இந்தச் சூழலில் திட்டம் கைவிடப்பட்டதாகவும் 4 ஆண்டுகளாக நீடித்த கோப்புகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதலில் தேர்வு செய்த வண்டியூர், தென்கால் கண்மாய்களில் ஏதாவது ஒன்றில் சிலை அமைத்து இருக்க வாய்ப்பு இருந்தது. அதை நிராகரித்த பிறகு எந்த முடிவு எடுக்க முடியாமல், நீடித்த கோப்புகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன” என்றார்.

சரிப்பட்டு வராது’

முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரி கடலில் 2000ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் திருவள்ளுவர் சிலையும் படகுப் போக்குவரத்தும் உருவாக்கி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். அதே போன்று மதுரையில் தமிழ்தாய் சிலை அமைக்கும் நோக்குடன்  அறிவிக்கப்பட்டது. முதலில் தேர்வு செய்யப்பட்ட வண்டியூர் கண்மாய் குறித்த விவரங்களில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் நேர்கோட்டில் அமைவது குறித்தும், அதைவிட உயரமாக சிலை அமைந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அடுத்து திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் அருகிலும் முருகன் கோயில் கோபுரம் அமைந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் வாஸ்து பார்க்கப்பட்டு, எந்த முடிவு எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. கடைசியில் `இது மதுரைக்கு சரிப்பட்டு வராது’ என்று கைவிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-02-2018

  21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • electrictrainchennai

  சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

 • SharjahLightFestival

  ஷார்ஜாவில் ஒளி திருவிழா: வண்ண விளக்குகளால் ரம்மியமாக மின்னிய நகரம்!

 • aircrashsearching

  ஈரானில் விமான விபத்து: தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம்

 • duofestivalsouthkorea

  தென்கொரியாவில் டூயோ பாரம்பரிய விழா கொண்டாட்டம்: டூயிங் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X