SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பள்ளி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை போலீசார் மீது குற்றச்சாட்டு

11/14/2017 9:05:57 AM

மதுரை, நவ.14: போதைப்பொருள் விற்பனைக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக் குழந்தைகளுடன் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மதுரை ஒத்தக்கடை அருகே மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் தேவகி. இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் பொய் புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார் எனவும், ஊரில் உள்ள சிலர் திட்டமிட்டு தங்களை மிரட்டி இடத்தை அபகரிக்க முயல்வதாகவும் கூறி, இவரது உறவினர் திவ்யா உட்பட 3 பெண்கள் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.
இதையடுத்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த பிரபாகர், நல்லதம்பி, முத்துராஜ், சேகர் உட்பட 6 பேர் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லதம்பியை கைது செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், மலைச்சாமிபுரத்தில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனை செய்வோர் ஆக்கிரமித்துள்ள 18 சென்ட் இடத்தை மீட்க வேண்டும். போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக உள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மலைச்சாமிபுரம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகளும் சீருடையுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலெக்டர் வீரராகவராவிடம் மனு அளித்துச் சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்