SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

“மனுக்களை கலெக்டர் கையில்தான் கொடுப்போம்” அடம் பிடித்த மக்களால் குறைதீர் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

11/14/2017 9:05:44 AM

மதுரை, நவ.14: “மனுக்களை கலெக்டரின் கையில்தான் கொடுப்போம்” எனக் கூறி மக்கள் அடம் பிடித்ததால் குறைதீர்க்கும் கூட்டத்தில் நீண்ட நேரம் காத்திருந்த மக்களால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

  இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் கேட்டு 95 மனுக்களும், ரேஷன் கார்டு கேட்டு 5 மனுக்களும், வேலைவாய்ப்புக் கோரி 15 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை கேட்டு 62 மனுக்களும், அடிப்படை வசதிகள் கோரி 40 மனுக்களும், புகார் தொடர்பாக 10 மனுக்களும் உள்ளிட்ட மொத்தம் 340 மனுக்கள் பெறப்பட்டன. 420 கிராம ஊராட்சிகளில் குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் வழங்க அதற்கான கருவியையும், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.  

 நேற்று நடந்த முகாமில் மனுக்கள் கொடுக்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 9 மணிக்கே வந்துவிட்டனர். வந்தவர்கள் அனைவரும் கலெக்டரிடம் மட்டுமே மனு கொடுக்க வேண்டும் என காத்திருந்தனர். பல்வேறு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு காலை 11 மணிக்கு கலெக்டர் வந்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். ஒவ்வொரு மனுவாக வாங்கி விசாரித்து உரிய அதிகாரிகளை  அழைத்துப் பேசி வந்தார். கூட்டம் 1.30 மணி வரை காத்திருந்தது. இதனால் மனு கொடுக்க வந்த சிலர் “அதிக நேரம் காத்திருக்கிறோம். விரைவாக வாங்க வேண்டும்” என கூச்சல் போட்டனர். கூட்டத்தில் இருந்தவர்கள் ஆங்காங்கே குரல் எழுப்பியதால், கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. உடனே கலெக்டர் அரங்கைவிட்டு வெளியே வந்து வரிசையில் நிற்பவர்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது சிலர் மொத்தமாக அவரை சூழ்ந்து மனுக்களைக் கொடுத்தனர். இதனால் மீண்டும்  குறைதீர் முகாமில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அனைவரிடமும் மனுக்கள் பெற்றுக்கொண்டதையடுத்து அமைதி திரும்பியது.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் சாந்தா, தாசில்தார்கள் கோபி, பாலாஜி, சுரேஷ் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

நம்பிக்கை: குறைதீர் கூட்டம் தொடங்கியதும் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பொதுமக்களிடம் “மனுக்களைக் கொடுங்கள்” எனக் கேட்டபோதிலும், “கலெக்டரின் கையில்தான் மனுக்களைக் கொடுப்போம்” என பொதுமக்கள் அடம் பிடித்தனர். காரணம், கலெக்டரின் கையில் மனுக்களைக் கொடுத்துவிட்டால் உரிய நடவடிக்கை இருக்கும் என்று நம்பிக்கைகொள்வதோடு, பிற அதிகாரிகளிடம் கொடுத்தால் உரிய நடவடிக்கை இருக்காது என்பதோடு மனு `வேறு’ இடத்துக்குப் போய்விடும் என்று மக்கள் நினைக்கின்றனர் என கூட்டத்திற்கு வந்த சிலர் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UnitedStatesMexico

    அமெரிக்கா-மெக்சிக்கோ இரும்பு கம்பி வேலிகளுக்கிடையே திருமணம்

  • poyas_jayallaitha

    போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தை தினகரன் ஆதரவாளர்கள் திடீர் முற்றுகை : போலீஸ் குவிப்பு

  • Sabarimala

    சபரிமலையில் மண்டல கால சிறப்பு பூஜைகள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • athithi_menon11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை அதிதி மேனன் பரிசுகள் வழங்கினார்

  • ludhiyana_pali11

    லூதியானாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்