SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாட்டு வேலை மோசடி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் கைது

11/14/2017 8:40:01 AM

திருச்சி, நவ.14: பொய் வாக்குறுதிகள் அளித்து வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்பி மோசடியில் ஈடுபட்ட 2 டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்களை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி இருங்களூரைச் சேர்ந்தவர் நெல்சன்(23). இவர் கடந்த 2015ம் ஆண்டு திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனம் மூலம் மாலத்தீவுக்கு கார்பென்டர் வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு சரியான வேலையும், சொன்னபடி ஊதியமும் வழங்கவில்லை. இதையடுத்து அவர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் புகார் கொடுத்துவிட்டு இந்தியா திரும்பினார். புகார் குறித்து நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம் தமிழக காவல்துறை தலைவருக்கு பரிந்துரைத்தது.

இதையடுத்து இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைவர் திருச்சி சிபிசிஐடி போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனம் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதும், அவர்கள் பொய்தகவல்களை கூறி மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து அந்த டிராவல்ஸ் நிறுவனர் சந்திரசேகர் (61) என்பவரை நேற்று திருச்சி சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல் திருச்சி கருமண்டபத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அப்ரார்அஹமது என்பவர் நடத்தி வரும் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் உ.பியை சேர்ந்த அஜய்குமார், விக்விஜய்பஸ்வான் ஆகிய இருவரையும் பொய்யான உறுதிமொழி அளித்து மாலத்தீவுக்கு அனுப்பி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட இருவரும் மாலத்தீவு இந்திய தூதரகத்தில் புகார் கொடுத்தனர். அது தொடர்பாகவும் உரிய பரிந்துரைகளின்படி திருச்சி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் கருமண்டபத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அப்ரார்அஹமதுவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

  • ANDHIRA_MANILAM11

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மாநிலமெங்கும் ஏராளமானோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்