SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண்ணச்சநல்லூரில் பஸ்கள் சுற்றி செல்வதால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் பாலப்பணியை முடிக்க கோரிக்கை

11/14/2017 8:39:39 AM

மண்ணச்சநல்லூர், நவ.14: மண்ணச்சநல்லூரில் பங்குனி வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் பெருவளை வாய்க்கால் என்று மூன்று வாய்க்கால்களில் பாலங்கள் பழுதடைந்து உள்ளதால் புதிய பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதையொட்டி போக்குவரத்துக்காக தற்காலிக பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. தற்போது புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தற்காலிக பாலம் அடிக்கடி சேதம் காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் வாகனங்கள் மண்ணச்சநல்லூரில் இருந்து சமயபுரம் கொள்ளிடம் டோல்கேட் வழியாக சுற்றிக்கொண்டு திருச்சிக்கு சென்று வருகின்றன. இதனால் மான்பிடிமங்கலம், சிலையாத்தி, மேல்பத்து உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்வசதியின்றி பாதிக்கப்பட்டனர். மேலும் நொச்சியத்தை அடுத்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மாணவ, மாணவிகள் மண்ணச்சநல்லூருக்கு கொள்ளிடம் டோல்கேட், சமயபுரம் வழியாக சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் நலன் கருதி பாலம் கட்டுமானப்பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று இப்பகுதி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்காலிக நடவடிக்கையாக காலை நேரத்தில் மண்ணச்சநல்லூர் வரை வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களை நொச்சியம் வழியாக பாலத்திற்கு முன்பாக உள்ள கோபால் மஹால் திருமண மண்டபம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 10-12-2018

    10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-12-2018

    09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 08-12-2018

    08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • roborestchina

    சீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்!

  • KungFuBullFighting

    குங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்