SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூலூர் அருகே இலவச ஆடு பயனாளிகள் தேர்வில் முறைகேடு?

10/12/2017 9:56:54 AM

சூலூர், அக். 12: சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்பாக நேற்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. சுல்தான்பேட்டை பிடிஓ ஷீலா தலைமை தாங்கினார். மண்டல ஏபிடிஓ விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
இதில் அப்பநாயக்கன்பட்டியில் இலவச ஆடுகள் பெறுவதற்கான இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு திரண்ட சிலர் கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளே மீண்டும் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து சூலூர் - சுல்தான்பேட்டை ரோட்டில் ராமமூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகே 30க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் மயில்குமார், எஸ்.ஐ., ரவீந்திரன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 13ம் தேதி (நாளை) மீண்டும் புதிதாக இலவச ஆடுகள் பெறுவோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். அப்போது, ஆட்சேபனை இருப்பவர்கள் தெரிவிக்கலாம் என்று கூறியதை தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் சூலூர் - சுல்தான்பேட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்