SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெங்கு காய்ச்சலுக்கு இந்திய முறை மருந்துகள்

10/11/2017 11:06:49 AM

திருச்சி: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் அறிக்கை: டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எஜிப்தி என்ற பெண் கொசு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்து பிறகு மற்றவர்களை கடிக்கும்போது டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. எனவே பொதுமக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மழைபெய்தால் மழை நீர் தேங்காமல் உடனே சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் சித்த மருத்துவத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்படும் நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு இவற்றுடன் தாளிசாதி சூரணம், திரிகடுகு சூரணம், லிங்க செந்தூரம், நிலவேம்பு சூரணம் மாத்திரை, சாந்த சந்நிரோதய மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, வேப்பிலை கருக்கு குடிநீர், பித்த சுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, சீந்தில் கசாயம், உரை மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் இவற்றையும் முறையாக மருத்துவரின் ஆலோசனை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

ஆயுர்வேத மருத்துவமுறையில் மகாசுதர்சன மாத்திரை, அமிர்தா அரிஷ்டம், அமிதோத்ர கசாயம் போன்ற மருந்துகளையும் பயன்படுத்தலாம். மேலும் குழந்தைகளுக்கு கொசுகடியிலிருந்து தப்பிக்க தும்பை, நொச்சி, வேப்பிலை, துளசி ஆகியவற்றை அரைத்து, வில்லை செய்து புகை போடலாம். குழந்தைகளுக்கு முழுக்கை உடைகளை அணிவித்து கற்பூராதி தைலம், வேப்ப எண்ணெய் எலுமிச்சைபுள் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை முழங்கை முழங்காலுக்கு கீழ் உடலில் தடவி விடலாம்.  டெங்கு ஜூரத்திலிருந்து விடுபட அருகிலுள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் சித்தா, ஆயூர்வேதா, ஓமியோபதி, யுனானி மருத்துவப்பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களை அணுகி டெங்கு காய்ச்சலிலிருந்து தற்காத்துகொள்ளலாம். டெங்கு காய்ச்சலை வராமல் தடுப்பதாகவும் ஒரே நாளில் தீர்ப்பதாகவும் கூறி சிறப்பு மருந்துகள் எங்களிடம் உள்ளது என்றும், போலி மருத்துவர்களின் போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DougJonesvictory

  அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

 • mudhalvar_palanisami11

  16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

 • kolkatha_silaii1

  கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டீகோ மரடோனாவின் 12 அடி உயர சிலை கொல்கத்தாவில் திறப்பு

 • heavysnow

  வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

 • 13-12-2017

  13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்