SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரேஷன் அரிசி, சர்க்கரை வேண்டுமா? வெங்காயம், தக்காளி வாங்க வேண்டும்

10/11/2017 11:06:38 AM

திருச்சி: வெங்காயம், தக்காளி வாங்கினால்தால் அரிசி, சர்க்கரை என்று கூறியதால் காந்திமார்க்கெட் அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள கீரைக்கடை பஜார் (15வது வார்டு) 1, 2ம் நம்பர் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை வாங்க வந்த பொதுமக்களிடம் வெங்காயம், தக்காளி, கடுகு போன்ற பொருட்கள் வாங்கினால் தான் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என கடை விற்பனையாளர்கள் கூறி உள்ளனர். இதற்காக ரேஷன் கடைகளின் முன் போர்டும் எழுதியும் வைத்துள்ளனர்.

வெங்காயம், தக்காளி போன்றவை அதிகவிலைக்கு விற்பனை செய்கின்றனர். ரேஷன் கடைக்கு வந்த மக்கள், எங்களுக்கு வெங்காயம், தக்காளி வேண்டாம் எனக் கூறி உள்ளனர். அப்படியானால் சர்க்கரை, அரிசி கிடையாது என கூறினர். இதனால் பொதுமக்களுக்கும், ரேஷன் கடைக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று காலையிலும் வழக்கம் போல வெங்காயம், தக்காளி வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்களுடன் மாதர்சங்கத்தின் தலைவி ரேணுகா தலைமையில் 100 பேர் ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் காந்தி மார்க்கெட் போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். ரேஷன் பொருள் தாசில்தார் முனுசாமி சம்பவயிடத்திற்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்க வேறு எந்த பொருளும் வாங்கும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என ரேஷன் கடை அலுவலரிடம் எழுத்துபூர்வமான உத்தரவை பிறப்பித்தார். இதன் நகல் பொதுமக்களிடமும் வழங்கப்பட்டதை தொடர்ந்து 1 மணி நேரம் நடந்த முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

  • kolkatha_silaii1

    கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டீகோ மரடோனாவின் 12 அடி உயர சிலை கொல்கத்தாவில் திறப்பு

  • heavysnow

    வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

  • 13-12-2017

    13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Christmasstarlights

    கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி நாடு முழுவதும் ஸ்டார் விளக்குகள் விற்பனை ஜோர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்