SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை போட்டி

10/11/2017 11:06:27 AM

திருச்சி: அண்ணா பிறந்நாளையொட்டி வரும் 22ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கட்டுரை, பேச்சு, கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை: அண்ணா 109வது பிறந்தநாளையொட்டி திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் வரும் 22ம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர் தங்களின் கல்வி நிலைய சான்றுகளோடு பங்கேற்கலாம்.

அதன்படி பேச்சுப்போட்டி  அகிலமே வியக்கும் அண்ணாவும், கலைஞரும், பகுத்தறிவு பாதையில் தந்தை பெரியாரும், கலைஞரும், மக்கள் நலனில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகிய  மூன்று தலைப்புகளில் பேசலாம். அதேபோல் கட்டுரைப் போட்டிக்கு மாணவர்கள் நலனில் அண்ணாவும், கலைஞரும், மொழிப்போரில் திமுக ஆகிய இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 100 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கவிதை ஒப்புவித்தல் போட்டிக்கு அறிவிப்புபடி உள்ள கலைஞரின் இரண்டு கவிதைகளில் ஏதேனும் ஒரு கவிதையை போட்டியில் ஒப்புவித்தல் வேண்டும். இசையுடனோ, ஒப்பனை அணிந்தோ கவிதைகளை ஒப்புவிக்க கூடாது.

திமுக இளைஞரணி சார்பில் நடக்கும் இந்த போட்டிகளில் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ள உயர்நிலை, மேல்நிலை மாணவ, மாணவியர்கள் பங்கேற்று இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இதில் மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், தலைமை செயற்குழு,  பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் என அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்