SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டத்தில் 2 நாள் லாரி ஸ்டிரைக்கால் ₹500 கோடி வர்த்தகம் பாதிப்பு நேற்று மாலை முதல் லாரிகள் இயங்கியது

10/11/2017 10:50:51 AM

சேலம், அக்.11: சேலம் மாவட்டத்தில் 2 நாட்கள் நடந்த லாரி ஸ்டிரைக்கால் ₹500 கோடிக்கு வர்த்தகம் பாதித்தது. ஸ்டிரைக் முடிந்து நேற்று மாலை முதல் லாரிகள் வழக்கம்போல் இயங்கின.நாடு முழுவதும் காலாவதியாகி உள்ள 327 டோல்கேட்டுகளை மூட வேண்டும், மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும், ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.

நாடு முழுவதும் நடந்த 2 நாள் லாரி டிரைக்கால், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. தமிழகத்தில், 4.5 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்றன. சேலம் மாவட்டத்தில், மொத்தமுள்ள 34 ஆயிரம் லாரிகளில் சுமார் 30 ஆயிரம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்று ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று 2வது நாள் ஸ்டிரைக்கால், வெளி மாநிலங்களுக்கு எந்தவித சரக்கும் செல்லவில்லை. இதனால் மார்க்கெட் குடோன்களில் சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. 2 நாளில் ₹500 கோடிக்கு வர்த்தகம் பாதித்ததாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.இதனிடையே மாலை 6 மணியுடன் ஸ்டிரைக் முடிந்ததால், லாரிகள் முழுமையாக இயங்க தொடங்கியது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்