SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டாத்துப்பட்டியில் சந்துகடை மதுவிற்பனையை தடுக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

10/11/2017 10:50:42 AM

சேலம், அக்.11: வாழப்பாடி அடுத்த கூட்டாத்துபட்டியில் செயல்பட்டு வரும் சந்துகடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “கூட்டாத்துப்பட்டியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தோம். பலகட்ட போரட்டங்களுக்கு பிறகு அந்த கடை அகற்றப்பட்டது. தற்போது அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் கள்ளத்தனமாக சந்துகடை நடத்தி மது விற்பனை செய்து வருகிறார். இதனால், பெண்கள் மற்றும் மாணவிகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட சந்துகடைக்காரர், ரவுடிகள் துணையுடன் வந்து புகார் அளிப்பவர்களை மிரட்டுகின்றார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்,” என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்