SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர் தற்காலிக பணிநீக்கம்

10/11/2017 10:48:24 AM

சென்னை, அக். 11: பொன்னேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியர் பார்த்திபன் (35). இவரது கற்பித்தல் முறையில் மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கல்லூரி முதல்வர் கருப்பனிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் இதற்கு முன்பாக பார்த்திபன் பணியாற்றியதாக கூறப்படும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளார்.  அவர்கள் ‘‘இந்த பெயரில் எங்கள் கல்லூரியில் யாரும் பணியாற்றவில்லை’’ என்று கூறியதாக தெரிகிறது.

எனவே கல்லூரி முதல்வர் கருப்பன் நுங்கம்பாக்கத்தில்  டிபிஐ அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் பார்த்திபனின் சான்றுகளை சரிபார்த்தனர். அவை போலியானவை என்று தெரிந்தது. இதையடுத்து கல்வி இயக்குனர் மஞ்சுளா, போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்த பார்த்திபனை தற்காலிக, பணிநீக்கம் செய்தார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி கல்லூரி தரப்பில் அளித்த புகாரின்பேரில் ஏமாற்றுதல், போலி சான்றிதழ் தயாரித்தல், முத்திரை கையெழுத்து பதித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ், பொன்னேரி போலீசார் வழக்குப்பதிந்து பார்த்திபனை தேடி வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்