SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்க ரூ.200 லஞ்சம் கண் மருத்துவமனை இயக்குனர் சஸ்பெண்ட் சுகாதார துறை நடவடிக்கை

10/11/2017 10:48:06 AM

சென்னை, அக். 11: மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்க ரூ.200 லஞ்சம் வாங்கிய கண் மருத்துவமனை இயக்குனர் ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் கண் மருத்துவமனைக்கு கடந்த மாதம் பார்வை குறைபாடு உள்ள ஒருவர் மாற்றுத்திறனாளி சான்றிதழ் கேட்டு வந்தார். மருத்துவமனையின் ஊழியர்கள், இயக்குனரை பார்க்கும்படி அனுப்பி வைத்தனர்.

அந்த மாற்றுத்திறனாளி, மருத்துவமனையின் இயக்குனர் ஸ்ரீதரை சந்தித்து சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு, கட்டணம் செலவாகும் என்று ஸ்ரீதர் கேட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவு என கேட்டதற்கு ரூ.500 என்று தெரிவித்துள்ளார். ஆனால், தன்னிடம் ரூ.200 மட்டுமே உள்ளது என்று மாற்றுத்திறனாளி கூறியுள்ளார்.

பேரம் முடிந்தவுடன் அதனை பெற்றுக்கொண்டு இயக்குனர் ஸ்ரீதர் சான்றிதழில் கையொப்பமிட்டு கொடுத்துள்ளார். இந்த காட்சிகள் பதிவான வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மருத்துவமனையின் இயக்குனர் ஸ்ரீதர் மீது துறை ரீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

விசாரணையில், முதலில் லஞ்சம் வாங்கவில்லை என்று இயக்குனர் ஸ்ரீதர் மறுத்துள்ளார். அதன் பிறகு, மேற்கொள்ளப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் ஸ்ரீதர் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வாங்க ரூ.200 லஞ்சம் வாங்கிய இயக்குனர் ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்