SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணெய் கப்பல்கள் விபத்து வழக்கு ஈரான் கப்பலை சிறைபிடிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

10/11/2017 10:47:25 AM

சென்னை, அக். 11: ஈரான் நாட்டை சேர்ந்த எம்.டி.மாப்பிள் கப்பலும், இந்தியாவை சேர்ந்த எம்.டி. டான் காஞ்சிபுரம் என்ற சரக்கு கப்பலும் கடந்த ஜனவரி 28ம் தேதி சென்னையை அடுத்த எண்ணூர் துறைமுகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் வாழ்வாதாரம் இழந்ததாக உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்களிடமிருந்து பெற்று கெடுக்க வேண்டும் எனவும், அந்த இழப்பீட்டு தொகையை கொடுக்கும்வரை கப்பல்களை சிறைபிடித்து வைக்க உத்தரவிட வேண்டும் எனவும்  மீனவர் சங்கம் சார்பில் எம்.இ.ராஜா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே கப்பல்கள் விபத்து விவகாரத்தில் இழப்பீடு கோரி தேசிய மீனவர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல கப்பல் விபத்து தொடர்பாக குற்ற விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் கப்பல் போக்குவரத்து இயக்குனரகம் எம்.டி.மாப்பிள் கப்பலை கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, கப்பல் போக்குவரத்து இயக்குனரகம் தரப்பில் ஏற்கனவே இந்த கப்பல் உரிமையாளர்கள் கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் பெயரில் ரூ.203 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை அளித்துள்ளனர். அதனடிப்படையில்தான் கப்பலை எடுத்து செல்ல ஆட்சேபனையில்லா சான்று  வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று, பிறப்பித்த உத்தரவில், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடாக வழங்க வேண்டிய ரூ.203 கோடி வங்கி உத்தரவாதத்தை வழங்கியுள்ளதால், ஈரான் கப்பலை எண்ணூர் துறை முகத்திலிருந்து கொண்டு செல்ல கப்பல்துறை இயக்குனர் அளித்த தடையில்லா சான்றிற்கு தடை விதிக்க முடியாது. மேலும், விபத்து தொடர்பான விசாரணையை 4 வாரத்திற்குள் காவல்துறை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இழப்பீடு தொடர்பான வழக்குகளுக்கு பசுமை தீர்ப்பாயத்தை மனுதாரர் அணுகலாம் என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 10thexams_111

  10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

 • hardik_anivaguppu

  பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

 • rahulgandhi_11

  அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

 • kumari_ogi_puyal11

  ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

 • porattam_arasu_11

  அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்