SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலூர் அருகே புதிதாக போட்ட தார் சாலையில் முளைக்குது புற்கள் தரமற்ற பணி என மக்கள் குற்றச்சாட்டு

9/26/2017 10:08:09 AM

மேலூர் : பல ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக போட்ட தார் சாலை தரமில்லாமல் போடப்பட்டுள்ளதால் அதில் புற்கள் முளைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்தது முத்துவேல்பட்டி. இங்கு சுந்தரராஜபுரம் முதல் கவட்டையம்பட்டி வரை உள்ள 3 கிமீ தூரத்திற்கு தார் சாலை அமைக்க ரூ.51 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இப் பணியை ஒப்பந்தாரர்கள் பிரித்துக் கொண்டனர். முதற்கட்டமாக எட்டிமங்கலம் முதல் வீரபுத்திரன்பட்டி வரை ரூ.10 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டது.
   
தரமில்லாமல் சாலை அமைக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி கலெக்டர் வரை புகார் மனு அளித்தனர். பணிகளை மக்கள் தடுத்து நிறுத்தியபோது, தரமான சாலை அமைப்பதாக ஒப்பந்ததாரர் உறுதி அளித்தார். தற்போது சாலை பணி முடிவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து வீரபத்திரன்பட்டியில் இருந்த எட்டுக்கண் பாலம் வரை ரூ.10 லட்சத்தில் தார் சாலை கடந்த வாரம் அமைக்கப்பட்டது. ஜல்லி பரப்புவது, தார் ஊற்றுவது எல்லாம் மிக மோசமாக உள்ளதாக அப்போது கிராம மக்கள் கூறியும், அதைக் கண்டுகொள்ளாமல் சாலைப் பணிகளை விரைந்து முடித்துவிட்டனர். இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட அந்த தார் சாலையில் பல இடங்களில் தற்போது புற்கள் முளைத்துள்ளன.

முத்துவேல்பட்டியைச் சேர்ந்த தமிழ்நாடு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்பாண்டி கூறுகையில், “இச்சாலை அமைக்கும்போதே தரமாக போட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம், ஆனால் அதை ஒப்பந்ததாரர்கள்  காதில் வாங்கிக்கொள்ளவில்லை. 200 மீட்டர் தூரத்திற்கு 10 முதல் 11 பேரல்கள் தார் ஊற்ற வேண்டும் என்பது விதி. ஆனால், இங்கு 7 பேரல்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இங்கு தார் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இவ்வளவு மோசமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இச் சாலையில் ஒரு இன்ச் அளவிற்குக்கூட தார் இல்லாமல் உள்ளதால் தற்போதே புற்கள் முளைத்து விட்டன. ஒன்றிரண்டு மழையுடன் இச்சாலை முற்றிலும் சேதமாகிவிட வாய்ப்புள்ளது. முத்துவேல்பட்டியில் உள்ள 40 வீடுகள் எட்டிமங்கலம் ஊராட்சியிலும், 60 வீடுகள் சென்னகரம்பட்டி ஊராட்சியிலும் உள்ளது.

இரு ஊராட்சிகளிலும் எங்கள் குடியிருப்பு அமைந்துள்ளதால் அடிப்படை வசதிகள் ஒவ்வென்றுக்கும் நாங்கள் இரு இடங்களுக்கு அலையும் நிலையும் உள்ளது. எங்களை ஒரே ஊராட்சியில் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். சாலை அமைத்த ஒரே வாரத்தில் புற்கள் முளைத்துள்ளது இப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்