SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய் வசதிகள் இன்றி பரம்புப்பட்டி மக்கள் பரிதவிப்பு

9/26/2017 10:08:02 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியத்தைச் சே்ரந்த பரம்புப்பட்டி கிராமத்தில்  தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், சாலை வசதி உள்பட அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியைச் சேர்ந்தது பரம்புப்பட்டி கிராமம். இங்கு 500க்கும்  மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2000 பேர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்பட அடிப்படை வசதி ஏதும் செய்யவில்லை.

குடிநீர் இணைப்பு இருந்தும் அதைப் பிடிப்பதற்காக குழாய் ஏதும் இல்லை. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த பாண்டிவேல் கூறுகையில் “நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எந்த அடிப்படை வசதிகளையும் ஒன்றிய நிர்வாகம்  எங்கள் கிராமத்திற்குச் செய்து கொடுக்கவில்லை. குடிநீர் குழாயே எங்கள் கிராமத்தில் இல்லை. அதேபோல் தெருவிளக்கு எரிந்து பல ஆண்டுகளாகி விட்டன. அடிப்படை வசதிகள் செய்து தர பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.

எங்களுக்கான நிதி எங்கு செல்கிறது என தெரியவில்லை” என்றார். அன்னலட்சுமி என்பவர் கூறுகையில், “குடிநீர் குழாய் ஏதும் இல்லை தரையில் பள்ளம் தோண்டி அதில் ஒரு குழாயை சொருகி அதில்தான் குடிநீர் பிடித்து வருகிறோம். கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் சாக்கடை ஓடுகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தூய்மையே சேவை வாரம் என கூறும் அதிகாரிகளுக்கு எங்கள் ஊர் மட்டும் விதிவிலக்காக உள்ளது. எனவே, தெருவிளக்கு, சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்