SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுமக்கள் மத்தியில் ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டி கொலை

9/13/2017 10:44:17 AM

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் ஒன்றாவது  தெருவை சேர்ந்தவர் முருகன் (எ) கேட் முருகன் (41), பிரபல ரவுடி. இவருக்கு வனிமா என்ற மனைவி உள்ளார்.  கடந்த 2007ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாக்சர் பாட்சா என்பவரை கொலை செய்த வழக்கு மற்றும் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.  கடந்த சில மாதங்களாக, புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அடிக்கடி வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

அதுபோல், நேற்று மாலை சீனிவாசபுரம் வந்த முருகன், அங்குள்ள செல்லியம்மன் கோயில் அருகே நடந்து சென்றபோது, அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென முருகனை அரிவாளால் வெட்ட முயன்றனர். அவர்களை கண்டதும் முருகன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை துரத்திய கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சிதறி ஓடினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவலறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, முன்விரோதம் காரணமாக முருகன் வெட்டி கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

டிரைவருக்கு வெட்டு

திருவொற்றியூர் இந்திரா நகரை சேர்ந்தவர் பர்னபாஸ் (36), லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த  6 பேர் கொண்ட கும்பல், பர்னபாசை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.  ரத்த வெள்ளத்தில் துடித்த  பர்னபாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, பர்னபாசை வெட்டி கொலை செய்ய முயன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள்  இந்திரா நகர் பேசின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர்.  அப்போது, 6 பேர் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupatibrammorchavam2017

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

 • NIRMALASitharaman

  டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

 • sachinswach

  தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

 • RAHULGANDHI

  குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

 • madurainavarathiri

  நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்