SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கண்டித்து பொதுமக்கள் மறியல் எதிர்ப்பை மீறி திறந்தால் அடித்து நொறுக்குவோம் என எச்சரிக்கை

9/13/2017 10:43:59 AM

பல்லாவரம்: குன்றத்தூர் - திருநீர்மலை சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குன்றத்தூர் - திருநீர்மலை சாலையில் வழுதலம்பேடு பகுதியில் நேற்று முன்தினம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த பகுதியில் ஏற்கனவே இருந்த டாஸ்மாக் கடை, பொதுமக்களின் போராட்டத்தால் அகற்றப்பட்டது. ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, மேற்கண்ட பகுதியில்  திடீரென கடந்த சில நாட்களாக டாஸ்மாக் நிர்வாகம் கட்டிடத்தை கட்டியது. நேற்று முன்தினம் அதிகாலையில், பொதுமக்களுக்கு தெரியாமல், வாகனத்தில் மதுபாட்டில்களை கொண்டு வந்து, இந்த கடையில் இறக்கினர். இதைதொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் நேற்று முன்தினம் கடையை திறந்து வியாபாரத்தை தொடங்கினர். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு சென்று, இதுபற்றி கேட்டதற்கு, கடையில் இருந்த விற்பனையாளர்கள் யாரும் முறையான பதில் கூறவில்லை. இதைதொடர்ந்து, வழுதலம்பேடு கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் முன் கண்டன கோஷமிட்டு டாஸ்மாக் கடையை மூடும்படி ஆர்ப்பாட்டம் செய்தனர். பொதுமக்கள் கூட்டமாக வந்ததை பார்த்ததும், அங்கு மது குடித்து கொண்டிருந்த குடிமகன்கள் தலை தெறிக்க ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் குன்றத்தூர் - திருநீர்மலை சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதனை பொதுமக்கள் ஏற்கவில்லை. டாஸ்மாக் கடையை மூடினால் மட்டுமே கலைந்து செல்வோம் என திட்டவட்டமாக கூறினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது, அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இறுதியில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வழுதம்பேடு கிராமத்தில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்பட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக கழிப்பிட வசதி  கிடையாது. ஊரின் ஒதுக்கு புறமான இடத்தையே பெண்கள் கழிப்பிடமாக உபயோகப்படுத்தும்  நிலை தற்போதும் உள்ளது. இதுபோன்று பெண்கள் ஒதுங்கும் இடத்தின் அருகிலேயே டாஸ்மாக்  அமைந்துள்ளதால் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக உள்ளது. மேலும் எங்கள் ஊருக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி அரசுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு கொடுத்தோம். ஆனால், அதுபற்றி இந்த அரசு செவி சாய்க்க மறுக்கிறது.

மாறாக நாங்கள் எதை வேண்டாம் என போராடுகிறோமோ அதனை எங்கள் மீது திணிப்பதில் மட்டும் குறியாக உள்ளது. வீட்டின் அருகிலேயே மதுக்கடை அமைவதால் இனிமேல் வயது வித்தியாசம் இல்லாமல், சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை மதுவுக்கு அடிமையாகும் நிலைமை உள்ளது.  குன்றத்தூர் முதல் திருநீர்மலை வரை செல்வதற்கு இதுவே பிரதான சாலையாக உள்ளது. அப்படிப்பட்ட இந்த சாலையில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று  பயந்து வரும் சூழ்நிலையே உள்ளது. இதுபோன்ற பகுதியில் டாஸ்மாக் கடை வருவதால் இனிமேல் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரத்தில் கூட பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் தனியாக  இந்த சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். இந்த சாலையில் திருட்டு, வழிப்பறி போன்ற  குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையும்  உள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் இந்த பகுதியில் மதுக்கடை திறக்க அனுமதிக்க மாட்டோம். அதையும் மீறி அரசு மதுக்கடை திறக்கும் பட்சத்தில் கடையை அடித்து நொறுக்குவதற்கும் தயங்கமாட்டோம்,’ என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HarrY_MeghanMarkel

  கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

 • Yelagirisummerceremony

  ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

 • kodai_flower

  கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

 • subwaymodi

  சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

 • 20-05-2018

  20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்