SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாத நபர்களின் பெயர்களுடன் வீடு கடைகள் முன்பு பேனர் வைப்பு பாக்கியை வசூலிக்க அதிகாரிகள் அதிரடி வியூகம்

9/13/2017 10:43:45 AM

சென்னை: சொத்து வரி செலுத்தாத தொகை எவ்வளவு என்பது குறித்து வீடு, வணிக வளாகங்கள் முன்பு நோட்டீஸ், பேனர் வைத்து பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கையில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி நடப்பாண்டில் ரூ.800 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் அரையாண்டு இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அனைத்து மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் மூலம் வரி வசூலிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சொத்து வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி பொருத்தி சென்னை மாநகராட்சி முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 ஞாயிற்றுக்கிழமைகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று சொத்து வரி செலுத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர்.  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொண்டதன் பலனாக இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சியில் சுமார் ரூ.290 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

சொத்து வரி செலுத்தாதவர்களின் சொத்துகளை  ஜப்தி செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்தநிலையில், சொத்து வரி செலுத்தாதவர்களிடம் இருந்து பாக்கியை வசூலிக்க வீட்டின் முன்பு சொத்து வரி செலுத்தாதவரின் பெயர், அவர் செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்டவை அச்சிடப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. சொத்து வரி செலுத்தாத வணிக வளாகங்கள் முன்பு  சொத்து வரி செலுத்தாதவரின் பெயர், அவர் செலுத்த வேண்டிய ெதாகை உள்ளிட்டவை அச்சிடப்பட்டு நீல நிறத்தில் பேனராக வைக்கப்பட்டு வருகிறது.
 இவ்வாறு, சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:சொத்து வரி வசூலிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருவாய் துறை ஊழியர்கள் விடுமுறை நாட்களிலும், பணி நேரத்தையும் கணக்கில் கொள்ளாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.எனவே, கடந்தாண்டை விட சொத்து வரி கூடுதலாக வசூலாகியுள்ளது. சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் துண்டு சீட்டு விநியோகம் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், சொத்து வரி செலுத்தாமல் மாநகராட்சியை ஏமாற்ற நினைத்தால் ஜப்தி உட்பட சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.   

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupatibrammorchavam2017

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

 • NIRMALASitharaman

  டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

 • sachinswach

  தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

 • RAHULGANDHI

  குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

 • madurainavarathiri

  நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்