SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா துவங்கியது பக்தர்கள் புனித நீராட சிறப்பு ஏற்பாடுகள்

9/13/2017 10:24:26 AM

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா நேற்று கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி பக்தர்கள் வசிக்காக சிறப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புஷ்கரம்  விழாவை சிறப்பாக கொண்டாட திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில்  பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா தொடங்கும் நாள் முதல் முடியும்  வரை பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தை சுற்றியுள்ள  பகுதிகளில் விழா நாட்களில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. காவிரியில் குளிப்பதற்கு ஆண்கள் மற்றும் பெண்கள்  இருபாலருக்கும் தனித்தனியே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உடை  மாற்றும் அறை, தற்காலிக ஓய்வறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் புஷ்கரம்  விழா நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கவும், அனைத்து விரைவு ரயில்களையும்  ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தவும் மற்றும் ரயில் நிலையத்தில் திருவிழா  தொடர்பான விளம்பரங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழா  நாட்களில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்து கூடுதலாக  இடஒதுக்கீடு வழங்கவும், இதற்காக ரங்கவிலாச மண்டத்தில் பயணசீட்டு விற்பனை  மற்றும் முன் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தபால் உறை வெளியீடு காவிரி  மகா புஷ்கர விழாவையொட்டி பாரத ஸ்டேட் வங்கி நிதி உதவியுடன் காவிரி மகா  புஷ்கர சிறப்பு தபால் உறை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. போஸ்ட்  மாஸ்டர் ஜெனரல் வெங்கடேஸ்வரலு தபால் உறையை வெளியிட ஸ்டேட் பாங்க் முதன்மை  பொது மேலாளர் ரமேஷ்பாபு பெற்றுக் கொண்டார்.

சிறப்பு மருத்துவ முகாம் அம்மாமண்டபம்  படித்துறையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் நலப்பணிகள் கட்டுப்பாட்டில்  மருத்துவக்குழு 2 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 15  மருத்துவர்கள், 15 செவிலியர்கள் மற்றும் 15 பணியாளர்கள் சுழற்சி முறையில்  பணியாற்றி வருகின்றனர்.  நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமில் சுமார் 175  பக்தர்கள் சிகிச்சை பெற்றனர். அவசர உதவிக்கு 108ஆம்புலன்ஸ்  ஒருங்கிணைப்பாளர் கண்ணன் (73977-24859) என்ற எண்ணிலும், மருத்துவக்குழு  ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆனந்தகுமார் (94420-57565) என்ற எண்களிலும்  தொடர்பு கொண்டு பயன்பெறலாம். பக்தர்கள் மகிழ்ச்சி காவிரி  புஷ்கர விழாவில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருகை  தர உள்ளனர். காவிரியில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்ததால் குளம் போல்  மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே, மாயனூர் தடுப்பணையில் இருந்து காவிரி  மகா புஷ்கர விழாவிற்கு தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு  செய்தது. இதையடுத்து மாயனூர் கதவணையில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட 1600  கனஅடி தண்ணீர் நேற்று மாலை அம்மாமண்டபம் படித்துறை வந்து சேர்ந்தது.  இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீட்புக்குழு தயார் தீயணைப்பு  மற்றும் மீட்பு பணிக்குழுவினர் அம்மாமண்டபம் படித்துறை, கீதாபுரம்,  கருடமண்டபம் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் படகுடன் தயார் நிலையில்  உள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் அம்மாமண்டபம் அருகே தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளது. 41 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் தயார் நிலையில்  உள்ளனர்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonSuperMarket

  பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

 • ManholeCoverJapan

  பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

 • PhilippineValcanoErruption

  பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

 • WorldEconomicConference

  ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

 • SWITZERLANDHeavySnow

  சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்