SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெடிகுண்டு வழக்கில் 1 நாள் கஸ்டடி விசாரணை முடிந்து ரவுடி மீண்டும் சிறையில் அடைப்பு

9/13/2017 10:24:16 AM

திருச்சி: வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி, ஒரு நாள் போலீஸ் கஸ்டடி முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரை சேர்ந்தவர் வேதமூர்த்தி(39). இவர் பாரதி நகர் 8வது கிராசில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு இவரது அலுவலகம் மீது பைக்கில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் நாட்டு வெடி குண்டை அலுவலகம் மீது வீசினர். இதில் கண்ணாடி கதவுகள், அடைப்புகள் உடைந்து நொறுங்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் லால்குடி பெரிய சீலியை சேர்ந்த ரவுடி மயில் (எ) மயில்வாகனன் என்பது தெரியவந்தது. இதில் கடந்த 2 ஆண்டுக்கு முன் புத்தூர் மீன் மார்க்கெட்டில் நின்றிருந்த வேதமூர்த்தியிடம் மயில் மாமுல் கேட்ட தகராறில் வேதமூர்த்தி மயிலை தாக்கினார். இதனால் மயில் அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1ம்தேதி இரவு மற்றொரு வேலைக்காக வந்த மயில், வேதமூர்த்தி மீது இருந்த கோபத்தில் ரியல்எஸ்டேட் அலுவலகம் வந்து வெடிகுண்டை வீசியது தெரியவந்தது. இந்நிலையில் போலீஸ் தேடுவதை அறிந்த மயில், கடந்த வாரம் துறையூர் கோர்ட்டில் சரணடைந்ததை அடுத்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மயிலிடம் விசாரணை நடத்துவதற்காக கடந்த வாரம் திருச்சி நீதிமன்றத்தில் 1 நாள் கஸ்டடி கேட்டு போலீசார் மனு அளித்தனர். மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் நேற்று முன்தினம் ஒருநாள் கஸ்டடி அளித்து உத்தரவிட்டார். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் மீண்டும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்